கல்வி அமைச்சர் GL.பீரிஸ் அவர்களின் கவனத்திற்குஒரு வேண்டுகோள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கல்வி அமைச்சர் GL.பீரிஸ் அவர்களின் கவனத்திற்குஒரு வேண்டுகோள்.


"அரச பாடசாலைகளில் primary மாணவர்களுக்கு புத்தக சுமை அதிகமாக இருக்கிறது.

( இதனால் உடல்,உள பாதிப்புக்கள் ஏற்படுகிறது)"

கல்வி முறைகளில் திறன் மேம்பாடுகள் முக்கியம் என்பது போல தேவையற்ற புத்தக சுமைகள் திட்டமிடப்பட்டு இல்லாமலாக்கப்படவும் வேண்டும்.

இலங்கையின் புதிய கல்வி மறுசீரமைப்புகளில் ஆரம்ப பிரிவி மாணவர்களுக்கான புத்தக சுமையை குறைப்பதற்கான அல்லது பாடசாலையின் வகுப்பறை முகாமைத்துவத்திற்கூடாக மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான சுற்றறிக்கைகளை பாடசாலை மட்டத்தில் வெளியீட்டு கல்வி அமைச்சு வழிப்படுத்தல் செய்ய வேண்டும்.

புத்தக சுமைகளை குறைப்பதற்கான எமது முன்மொழிவுகள்,

1. சுற்றாடல், கணிதம், தமிழ், ஆங்கிலம், சமயம் போன்ற பாடங்களுக்கான பாடப்புத்தகங்களை மூன்று பகுதிகளாக அச்சிட்டு வழங்குதல். (ஒவ்வொரு பகுதி முடிவடைய முடிவடைய குறிப்பிட்ட ஒரு பகுதி புத்தகங்களை மாத்திரம் புத்தக பைகளில் கொண்டுவருவார்கள்)

2. மேலதிக பயிற்சிகளுக்காக பாடப்புத்தகங்கள் தவிர்ந்த ஏனைய பயிற்சிப் புத்தகங்களை மேலதிகமாக கடைகளில் கொள்வனவு செய்வதை இல்லாமலாக்கி, பாடசாலை ரீதியாக தயாரிக்கப்படுகின்ற work sheet களுக்கூடாக பயிற்சி வழங்குதல். (இதனால் மேலதிக பயிற்சி புத்தகங்களை புத்தக பைகளுக்குள் கொண்டு வரவேண்டிய தேவை இருக்காது.)

3. ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களின் புத்தகங்களை வைத்துவிட்டு சொல்வதற்கான "அலுமாரி" வசதியை செய்து கொடுத்தல். (அன்று இரவு வீட்டு வேலைக்காக வழங்கப்படும் புத்தகங்களை மாத்திரம் கொண்டு செல்லல் மற்றய புத்தகங்களை பாடசாலைகளில் வைத்துவிட்டுச் செல்லல்)

4. ஒவ்வொரு பாடத்துக்குமான அப்பியாசக் கொப்பிகளை 100 தாள், 200தாள் என்று வாங்க வைக்காமல் 40 தாள், 60 தாள் என்று வாங்குவதற்கு வழிப்படுத்தல்

ஆரம்பு பிரிவு மாணவர்களின் புத்தக பைகளை பெற்றோர்களால் கூட சுமக்க முடியாமல் பாரமாக இருக்கின்ற போது மிகவும் சிறுபராயத்தினர் எவ்வாறு சுமப்பார்கள்?

இதில் பாடசாலைகளும் , பெற்றோர்களும், இலங்கை அரசாங்கமும் கவனயீனமாக செயற்படுவதுதான் எமக்குக் கவலை.

#பாடசாலையின் #கவனயீனம் -  மேலதிகமாக அளவுக்கதிகமான பயிற்சி புத்தகங்களை கொள்வனவு செய்ய வைத்தல், அதேபோன்று பாடசாலை வகுப்பறையில் அவற்றை வைத்துவிட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது. (வீட்டு வேலைக்கான புத்தகத்தை மாத்திரம் கொண்டு போக வழிப்படுத்தல்)

#பெற்றோரின் #கவனயீனம் -

ஆரம்ப பரிவு மாணவர்களின் சுமைக்கு ஏற்ற புத்தக பைகளை கொண்டு செல்வதற்காக பாடசாலை நிருவாகத்தின் கவனத்தை திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. (இதற்கு அதிபர் - பெற்றோர் தொடர்பு அவசியம்) 

#அரசாங்கத்தின் #கவனயீனம் -

புதிய கல்விக் கொள்கைகளில் கவனம் எடுக்கின்ற அளவிற்கு ஆரம்பப் பிரிவு மாணவர்களின் அதிகரித்த புத்தக சுமையை குறைப்பதற்காக இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை.

[MLM.சுஹைல்]
கல்வி அமைச்சர் GL.பீரிஸ் அவர்களின் கவனத்திற்குஒரு வேண்டுகோள். கல்வி அமைச்சர் GL.பீரிஸ் அவர்களின் கவனத்திற்குஒரு வேண்டுகோள். Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5