புதிய அரசின் கீழ் நீண்ட நாட்களுக்கு பின் இரத்தினபுரி நகரில் பாரிய அபிவிருத்தி திட்டம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

புதிய அரசின் கீழ் நீண்ட நாட்களுக்கு பின் இரத்தினபுரி நகரில் பாரிய அபிவிருத்தி திட்டம்அதிவேக பாதை,  புகையிரதம்  அமைக்கும் திட்டம்,  வீதி 
அபிவிருத்தி,  மேம் பாலங்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு திட்டமாக இரத்தினபுரி டிப்போவில் இருந்து கொடிகமுவ பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு இடையுராக இருக்கும் பழைய புகையிரத பாலம் ஒன்றை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இப்பாலமானது பாதையில் செல்லும் வாகனங்கள் பாலத்தில் மோதுவதால் அகற்றப்படுகின்றது.

இந்த பாதையானது மிகவும் பிரபல்யமான சிவனொலிப்பாத மலைக்கு செல்வதற்கான இலகுவான ஒரு பாதையாகும்.

தற்போது இவ்வேலைத்திட்டங்கள் நடைபெறுவதை இட்டு பிரதேச மக்கள் அரசிற்கு நன்றி கூறிக்கொள்கின்றது.
புதிய அரசின் கீழ் நீண்ட நாட்களுக்கு பின் இரத்தினபுரி நகரில் பாரிய அபிவிருத்தி திட்டம் புதிய அரசின் கீழ் நீண்ட நாட்களுக்கு பின் இரத்தினபுரி நகரில் பாரிய அபிவிருத்தி திட்டம் Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5