கொழும்பு மற்றும் தென் மாகாணத்துக்கு அரிசி லொறிகளில் மறைத்து மிக சூட்சுமமான முறையில் ஆயுதம் கடத்தியவர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது .


பொலன்னறுவையிலிருந்து அரிசி லொறிகளில் மறைத்து மிக சூட்சுமமான முறையில் கொழும்பு மற்றும்
தென் மாகாணத்துக்கு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய  மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் இவ்வாறு அரிசி லொறிகளில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். கடுவெல, நுகேகொட மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளைச் சேர்ந்த நபர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஏற்கனவே பிரபல பாதாள குழு குற்றவாளியான மாக்கந்துரை மதுஷின் சகாவான பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கெலும் இந்திக்க என்ற கெவுமா என்பவருடன் இணைந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக  விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கடுவெல பஸ் தரிப்பிடத்தில் வைத்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மற்றுமொரு சந்தேக நபர் நுகேகொட பகுதியில் வைத்தும் மேலுமொரு சந்தேக நபர் கதிர்காமம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்த நிலையிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்களை பொலன்னறுவையிலிருந்து கொண்டு வருதல், நுகோகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல்  லொறிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் ஆகிய குற்றங்களுக்காகவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கடத்தப்பட்ட ஆயுதங்கள் நுகேகொட பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் அது தொடர்பான  பரிசோதனை நடவடிக்கைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர்.

திஸ்ஸமஹாராம பகுதியிலுள்ள விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெவுமா என்பவரின் அறிவுறுத்தலுக்கமைய பாதாள குழு உறுப்பினர்களிடையே ஆயுதங்களை விநியோகித்து வந்ததாகவும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 6 கைத்தொலைபேசிகள் மற்றும் 3 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் குற்றப் புலனாய்வு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாந்த ரத்தேபிட்டியவின் வழிகாட்டலின்கீழ் விசேட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு மற்றும் தென் மாகாணத்துக்கு அரிசி லொறிகளில் மறைத்து மிக சூட்சுமமான முறையில் ஆயுதம் கடத்தியவர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது . கொழும்பு மற்றும் தென் மாகாணத்துக்கு அரிசி லொறிகளில் மறைத்து மிக சூட்சுமமான முறையில் ஆயுதம் கடத்தியவர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது . Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.