கொவிட் தடுப்பு எப்படி வெற்றி கொள்ளப்பட்டதோ, நாட்டின் பொருளாதார சவால்களும் அதே போன்று வெற்றி கொள்ளப்படும் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொவிட் தடுப்பு எப்படி வெற்றி கொள்ளப்பட்டதோ, நாட்டின் பொருளாதார சவால்களும் அதே போன்று வெற்றி கொள்ளப்படும் .


கொவிட் 19 தாக்கத்திற்கு மத்தியிலும் சிறந்த செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திய
இலங்கைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

நாட்டின் பொருளாதார சவால்களும் இதேபோன்று வெற்றி கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சேவையில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெளிவான முறையான செயற்றிட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வங்கித்துறை வலுப்படுத்தப்படுவதோடு, தொழில் முயற்சியாளர்களையும் பாதுகாப்பது அவசியமாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
கொவிட் தடுப்பு எப்படி வெற்றி கொள்ளப்பட்டதோ, நாட்டின் பொருளாதார சவால்களும் அதே போன்று வெற்றி கொள்ளப்படும் . கொவிட் தடுப்பு எப்படி வெற்றி கொள்ளப்பட்டதோ,  நாட்டின் பொருளாதார சவால்களும்  அதே போன்று வெற்றி கொள்ளப்படும் . Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5