இலங்கை முஸ்லிம்கள் தங்களது பூர்வீக அடையாளங்களை பாதுகாக்காமல் தொல்லியல் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாது .


இலங்கை முஸ்லிம்கள் தங்களது  பூர்வீக அடையாளங்களை பாதுகாக்காமல்
தொல்லியல் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாது   பேராதனைப்பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர்   

 இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்று  வாழிடங்கள் தொடர்பான பல்வேறு அடையாளங்கள் உள்ளன இலங்கை தேசத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பையும் அவர்களது வருகையையும் பறைசாற்றும் அவை எமது நீண்ட கால இருப்பில் ஆதார அடையாளங்களாகவும்   உள்ளன ஆனால்  முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட இயக்கச் சிந்தனைகளும் சமயப் புதுமை வாதமும் அவற்றை இல்லாது ஒழித்துள்ளன   என பொத்துவில் பாதுஷா பவுண்டேசன் ஏற்பாடு செய்த முஹர்ரம் புதுவருட நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து உரையாற்றும்போது குறிப்பிட்டார் .


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்.. இன்றைய இலங்கையில் இவ்வாறான பூர்விக அடையாளங்கள் எம் நாட்டின் முக்கிய தொல்லியல் விடயங்களுக்கான ஆதாரங்களாக கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் பொத்துவில் பிரதேசத்தில் காணப்பட்ட பல்வேறு அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன அவ்வாறான அடையாளங்களில் மிஞ்சி இருப்பது பொத்துவில் நாகூர் ஆண்டகை தர்கா மட்டுமேயாகும்..


இத் தர்காவுக்கு சாகுல் ஹமீது வலியுல்லா அவர்கள் கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வருகை தந்திருக்கிறார்கள் இந்த வருகைக்கான பல அடையாளங்கள் இப்பிரதேசத்தில் உள்ளன


ஆனாலும் அவற்றை மக்கள் சரியாகப் பாதுகாக்கவில்லை அதேபோன்று இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறான அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருகின்றன இந்த சமயவாத புதுமையான சிந்தனைகள் மக்களின் இருப்புகளுக்கு மட்டுமல்ல அவர்களின் வாழ்வியல் நிலங்களுக்கான அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன இவ்வாறான வன்முறை சிந்நனைகலிருந்து மக்களை மீட்பது எமது கடமை மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழ்வோர் தமக்கான உண்மையான அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலை இன்று ஏற்பட்டுள்ளது அண்மையில் கிழக்கு மாகாண தொல்லியல் விடயங்களுக்காக அமைக்கப்பட்ட தொல்லியல்  செயலணி செயற்படத் தொடங்கும்  போது அவர்கள் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்து உங்களது அடையாளங்களையும் உங்களது நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கேட்பார்கள் அபபோது நீங்கள் எவற்றை ஆதாரமாக முன்வைக்க போகின்றீர்கள்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது அந்த வகையில் நாங்கள் இலங்கை முஸ்லிம் முன்னோர் கள் எங்களுக்கான வியாபார ,மருத்துவ அரசு தொடர்பு பண்டிகைகள் போன்றவற்றில் பல்வேறு அடையாளங்களை நாங்கள் நிரூபித்துள்ளனர் அவற்றை இன்றைய தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும்..


 சிங்கள மன்னர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சினேக பூர்வ உறவுகள் காணப்பட்டிருக்கின்றன குருநாகல் பிரதேசத்தை ஆட்சி செய்த புவனேகபாகுவின்  வரலாற்றிலும்  இதற்கான ஆதாரம்மிக தெளிவாக உள்ளது.


அதே போன்று பல அடையாளங்கள் உள்ளன அந்த வகையில்  இவற்றைபாதுகாப்பது என்பது இன்றைய கட்டாய கடமையாக இருக்கின்றது அவற்றின் மூலம் தான் சிங்கள முஸ்லிம் உறவை இன்று நாங்கள் கட்டமைக்க வேண்டியுள்ளது தேவையற்ற இனவாத,சமயப் புதுமை வாத சிந்தனைகளில் இருந்து விடுபட்டு முஸ்லிம்கள் தமது அடையாளங்களை பாதுகாத்து அதன் மூலம் நாட்டின் இன உறவிற்கும்,
தேச ஒருமைப்பாட்டிற்கும் உரிய பங்களிப்பை வழங்கி நினைவுகூர வேண்டும்    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்களும் கலந்துகொண்டுபூர்வீகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்கள் தங்களது பூர்வீக அடையாளங்களை பாதுகாக்காமல் தொல்லியல் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாது . இலங்கை முஸ்லிம்கள் தங்களது  பூர்வீக அடையாளங்களை பாதுகாக்காமல் தொல்லியல் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாது . Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.