அக்குறணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டங்களை அகற்ற அனுமதி கிடைத்தால் உடன் அகற்றுவேன்.


அக்குறணை நகரம் உட்பட அக்குறணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்கள்
இருப்பதாக இணங் காணப்பட்டு அவற்றை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தும்படி அரசோ அன்றி சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்க​ளோ அறிவுறுத்தல் விடுத்தால் அதனை உடனடியாக நிறைவேற்றிட தான் கடமைப்பட்டுள்ளதாகவும் அதனை நிறைவேற்றுவதும் நடைமுறைப்படுத்துவதும் தனது முக்கியபணியும் கடமையுமாகுமென அக்குறணை பிரதேச சபை தலைவர் ஐ.எப். இஸ்திகார் தெரிவித்தார்.

கண்டி பூவெளிகட பகுதியில் ஐந்து மாடி கட்டிடமொன்று இடிந்து விழுந்து மூன்று உயிர்களை காவுகொண்டதன் விளைவாக மத்தியமாகாண ஆளுநர் லலித் யூ கமகேயின் விஷேட பணிப்புரைக்கிணங்க கண்டி மாநகரில் சட்டவிரோத கட்டிடங்கள் விடயமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வுகளின் மூலம் கண்டி மாநகரில் சுமார் 250ற்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் இருப்பதாகவும் அவற்றை உடனடியாக இடித்து அகற்ற வேண்டி அவசியம் பற்றியும் இந்த கட்டிடங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அக்குறணை நகரம் உட்பட அக்குறணை பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் சம்பந்தமாக வினவிய போதே அக்குறணை பிரதேச சபை தலைவர் ஐ.எப். இப்திகார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைகளின் போது அக்குறணை பிரதேசத்தில் பெய்த கடும் மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அக்குறணை நகர ஊடாக ஓடும் பிங்கா ஓயா பெருக்கெடுத்து அக்குறணை நகரம் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் பல கோடி ரூபாய் பெறுமதியான உடமைகள் சேதமடைந்தன. வர்த்தக நிலையங்களும் குடியிருப்பு பகுதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இனிவரும் காலங்களில் அக்குறணை பிரதேச பகுதிகளில் எவ்விதமான காரணம் கொண்டும் சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதிகள் வழங்கப்போவதில்லை.
அக்குறணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டங்களை அகற்ற அனுமதி கிடைத்தால் உடன் அகற்றுவேன். அக்குறணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  சட்டவிரோத கட்டங்களை அகற்ற அனுமதி கிடைத்தால் உடன் அகற்றுவேன். Reviewed by Madawala News on September 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.