VIDEO : அதாவுல்லாவின் ஆடை குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை அடுத்து பாராளுமன்றை விட்டு வெளியேறினார். - Madawala News Number 1 Tamil website from Srilanka

VIDEO : அதாவுல்லாவின் ஆடை குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை அடுத்து பாராளுமன்றை விட்டு வெளியேறினார்.


தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை, இலங்கையின்
நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்றது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அதாவுல்லா அணிந்திருப்பது அவரது தேசிய உடை என கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா பக்கம், நாடாளுமன்றத்தின் கெமராக்கள் திருப்பப்படவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இதன் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், அதாவுல்லா, ஆப்கானிஸ்தான் உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதாக கூறியுள்ளார்.
VIDEO : அதாவுல்லாவின் ஆடை குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை அடுத்து பாராளுமன்றை விட்டு வெளியேறினார். VIDEO : அதாவுல்லாவின் ஆடை  குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை அடுத்து பாராளுமன்றை விட்டு வெளியேறினார். Reviewed by Madawala News on September 22, 2020 Rating: 5