‘அபே ஜன பலய’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஞானசார தேரர் பாராளுமன்றுக்கு... - Madawala News Number 1 Tamil website from Srilanka

‘அபே ஜன பலய’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஞானசார தேரர் பாராளுமன்றுக்கு...


‘அபே ஜன பலய’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை கலகொட அத்தே ஞானசார
தேரருக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் மாநாட்டிலேயேஇத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதேவேளை 'அபே ஜன பலய' கட்சியின் முன்னாள் பொதுச் செய லாளர் வெதினிகம விமலசார தேர ருக்கு எதிராக ஒழுக்காற்று நடவ டிக்கை எடுப்பதற்கான தீர்மானமும்
மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தேரர் தனது சொந்தப் பெயரை தேசியப்பட்டி யல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு முன்மொழிந்ததையடுத்தே இத்தீர் மானம் எடுக்கப்பட்டது. அதுபோல் விமலதிஸ்ஸ தேரரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவும் இதன்போது எடுக்கப்பட்டது.

‘அபே ஜன பலய’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஞானசார தேரர் பாராளுமன்றுக்கு... ‘அபே ஜன பலய’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான  ஞானசார தேரர் பாராளுமன்றுக்கு... Reviewed by Madawala News on September 23, 2020 Rating: 5