போதைப்பொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் ஆலோசனை - Madawala News Number 1 Tamil website from Srilanka

போதைப்பொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் ஆலோசனை

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டவிரோதாமாக பெற்ற  சொத்துக்கள் மற்றும்
பணத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் உரிய அதிகாரிகளுடன் இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

தற்போது போதைப்பொருள் கடத்தற்காரர்கள் தாம் சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்கள் மற்றும் பணத்தை வழக்குகள் நிறைவடையும் வரை பயன்படுத்தும் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே போதைப்பொருள் கடத்தற்காரர்கள் கைது செய்யப்பட்டதும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் இதன்போது கோரியுள்ளனர்.

இது தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் ஆலோசனை போதைப்பொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் ஆலோசனை Reviewed by Madawala News on September 15, 2020 Rating: 5