போதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தில் ஒரு சிறந்த பிரஜையாக உருவாக்க நிலையம் திறப்பு.


"போதையற்ற புதிய கிராமத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் நிர்மானிக்கப்பட்ட  போதைக்கு 
அடிமையானோரை இனங்கண்டு  அவர்களின் அனுமதிக்கு மத்தியில் புனர்வாழ்வளித்து சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாக உருவாக்கும் நன்நோக்குடன் எறுக்கலம்பிட்டி சமூக அபிவிருத்தி   மற்றும்  ஜனாஸா நலன்புரி சங்கமும், எருக்கலம்பிட்டி  பள்ளி பரிபாலன சபை, அதனோடு இணைந்த பொது அமைப்புக்களும் இணைந்து ,மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற புனர்வாழ்வு நிலையமொன்றை நேற்று (20.09.2020) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான  காதர் மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டு உத்தியோகப்பூர்வமாக திறைநீக்கம் செய்து அப்புனர்வாழ்வு  நிலையத்தை  திறந்து வைத்தார்.
போதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தில் ஒரு சிறந்த பிரஜையாக உருவாக்க நிலையம் திறப்பு. போதைக்கு  அடிமையானோருக்கு புனர்வாழ்வளித்து   சமூகத்தில் ஒரு சிறந்த  பிரஜையாக உருவாக்க நிலையம் திறப்பு. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.