கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் கப்ரு தோண்டும் தண்டனை.


கொரோனா பாதுகாப்புக்கு முகக் கவசம் அணியாமல் பொலிஸாரிடம் சிக்கினால் தண்டனையாக கப்றுகளை
தோண்ட வேண்டும் என இந்தோனேஷியாவில் நூதன தண்டனை அமுலுக்கு வந் துள்ளது.

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்களுக்கு தண்டனையாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கப்று  தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட் டுள்ளனர்.


கொரோனாவால் உயிரிழப் பவர்களை அடக்கம் செய்ய குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது மூன்று பணியாளர்கள் மட்டுமே உள்ள னர். எனவே முகக்கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாமென திட்ட மிட்டேன் என செர்ம் மாவட்ட தலைவர்  சுயோனோ தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் முகக்கவசம் மிகவும் அத்தியா வசியமானது. எனவே இத்தண்டனை யானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்குமென நம்புகிறேன் எனவும் அவர் கூறினார்.
கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் கப்ரு தோண்டும் தண்டனை. கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால்  கப்ரு தோண்டும் தண்டனை. Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.