முஸ்லிம் ஜனாஸாக்கள் தீக்கிரையான போது தமிழ் தலைமைகள் யாரும் முஸ்லிங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை.



நூருல் ஹுதா உமர்  / சர்ஜுன் லாபீர்
கிழக்கு வாழ் மக்கள் பாக்குவெட்டியின் நடுவில் சிக்கிய
 பாக்குகள் போன்று இருந்து கொண்டிருக்கிறோம்.  தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அதே நேரம் இந்த பிராந்திய முஸ்லிங்களின் அரசியல் உரிமைகளை, அதிகார மையங்களை தக்கவைக்க வேண்டிய காலகட்டத்தில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

 சாய்ந்தமருது தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் அதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், 

எமது முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக கிழக்கு வாழ் மக்கள் பாக்குவெட்டியின் நடுவில் சிக்கிய பாக்குகள் போன்று இருந்து கொண்டிருக்கிறோம்.  தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அதே நேரம் இந்த பிராந்திய முஸ்லிங்களின் அரசியல் உரிமைகளை, அதிகார மையங்களை தக்கவைக்க வேண்டிய காலகட்டத்தில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம். அதுக்கான வழிவகைகளை எமது அரசியல் தலைமைகள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருக்கிறது. 

இன்று (27) சம்மாந்துறையில் நடைபெற்ற பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நினைவு தின விழாவில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சில விடயங்களை பேசிவிட்டு முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக முஸ்லிங்களாகிய நாங்கள் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். 

 இப்படி பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனை நகரை முஸ்லிங்களுக்கு விட்டுத்தர முடியாதென்று கடந்த வருடம் முழுவதும் எங்களுக்கெதிராக போராட்டம் நடத்தியவர்.

இவ்வாறு அவர் இரட்டை முகத்தை கொண்டு செயற்படுகின்ற சூழலில் எங்களை தெற்கிலுள்ள அரசுடனும் பெரும்பான்மை மக்களுடனும் மோத விடுவதற்கான கருவியாக பயன்படுவதை உணர்ந்து நாங்கள் அவதானமாக இருக்கவேண்டிய காலம் இது. 

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் சக்தியாக இந்தியா இருக்கிறது. நேற்றைய தினம் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடியின் உரையில் கூட 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக பேசியிருக்கிறார். ஆனால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்களை இந்த நாட்டில் எரித்த வட- கிழக்கில் உள்ள தமிழ் தலைமைகள் யாரும் குரல்கொடுக்க வில்லை என்பதை நாம் புரிந்து கொண்டவர்களாக இந்த முஸ்லிம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும் என்றார். 

இந்நிகழ்வில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும், மெஸ்ரோ ஸ்ரீலங்காவின் தலைவருமான சட்டத்தரணி ஏ.எம். நஸீல், வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சட்டத்தரணி ஹபீப் றிபான், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.ஜாபீர், சாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளருமான நௌபர் ஏ பாபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை, காரைதீவு உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், சாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர், பொருளாளர், பிரதித்தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள், பிரதேச கழகங்ளின் கிரிக்கட் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 
முஸ்லிம் ஜனாஸாக்கள் தீக்கிரையான போது தமிழ் தலைமைகள் யாரும் முஸ்லிங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை. முஸ்லிம் ஜனாஸாக்கள் தீக்கிரையான போது தமிழ் தலைமைகள் யாரும் முஸ்லிங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை. Reviewed by Madawala News on September 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.