பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார் - Madawala News Number 1 Tamil website from Srilanka

பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார்


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா
எனும் “ரத்மலானே ரொஹா” என்பவர் பொலிஸாருடன் மேற் கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடந்த 24 ஆம் திகதி வியாழக் கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாரான போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உல கத் தலைவரான ரத்மலனே ரொஹா என்ற தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வாவின் உடல் சுமார் 4 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட சவப் பெட்டியின் வைக்கப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரது குடும்ப உறவினர்கள் கொழும்பிலுள்ள மலர்சாலையிலிருந்து குறித்த சவப்பெட்டியைக் கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் உடல் தற்போது ரத்மலானேவிலுள்ள அவ ரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான “ரத்மலானே ரொஹா” உடல் விலை உயர்ந்த சவப் பெட்டியில்... ; போலீசார் Reviewed by Madawala News on September 26, 2020 Rating: 5