விளையாட்டுத்துறைக்கு பொருத்தமான அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.



பொருத்தமான நபருக்கு பொருத்தமான அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அவர் இடையீட்டு கேள்வியொன்றை முன்வைக்கையில் இவ்வாறு கூறினார். முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு மைதான பணி ஆரம்பிக்கப்படாதது குறித்தும் மன்னார் மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் ஸ்தம்பிதமாகியுள்ளது பற்றியும் மன்னார் எமில் நகர மைதானப் பணி ஆரம்பிக்கப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்..

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முல்லைதீவு,மன்னார் மாவட்ட மைதானங்கள் மற்றும் மன்னார் நகர எல்லையிலுள்ள எமில் நகர பொது விளையாட்டு மைதானம் என்பவற்றை நிர்மாணிக்க அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 2021 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோருகிறேன் என்றார்.
விளையாட்டுத்துறைக்கு பொருத்தமான அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறைக்கு பொருத்தமான அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். Reviewed by Madawala News on September 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.