ஐ.தே.கவின் அந்த தேசியப்பட்டியல் யாருக்கு என்ற முரண்பாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க, தீர்வை முன்வைத்தார்.


தனது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய ப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை
யாருக்கு வழங்குவதென, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளுக்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தீர்வை முன்வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைபெற்றது. அதில், படு​​தோல்வியை சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஒரேயொரு தேசியப்பட்டியல் மட்டுமே கிடைத்தது.

தேசியப் பட்டியலின் ஊடாக, நாடாளுமன்றத்துக்கு யாரை அனுப்புவது என்பது தொடர்பில் கட்சிக்குள் கயிறு இழுப்புகள் ஏற்பட்டன. ரணில் விக்கிரமசிங்கவை அனுப்பவேண்டும். கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசனத்தை அனுப்பவேண்டும். இல்லை​யேல் கட்சியின் சட்ட ஆலோசகர்களில் ஒருவரை அனுப்பவேண்டுமென யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த இழுபறியான நிலைமையால், கடந்த ஒன்றரை மாதங்களாக, ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் வெற்றிடம் நிரப்பப்படாமலே இருந்தது.

தேர்தலில் தோல்வியடைந்த, ஐக்கிய தேசியக் கட்சியின்  வேட்பாளர்களில் ஐவர், தங்களையே தேசியப் பட்டியலின் ஊடாக நியமிக்கவேண்டுமென, ரணில் விக்ரமசிங்கவிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை, அந்தக் கட்சியின் புதிய பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும் ஒரு சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு,  கட்சியின்  தேசியப் பட்டியலின் பெயர் பட்டியலில், முதலாவதாக  இருப்பவருக்கே சந்தர்ப்பத்தை வழங்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.

கடந்த பொதுத் தேர்தலின் போது, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கையளித்த தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பெயரை முதலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கவின் அந்த தேசியப்பட்டியல் யாருக்கு என்ற முரண்பாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க, தீர்வை முன்வைத்தார். ஐ.தே.கவின் அந்த தேசியப்பட்டியல் யாருக்கு என்ற முரண்பாடுகளுக்கு  ரணில் விக்கிரமசிங்க, தீர்வை முன்வைத்தார். Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.