எமது அமைச்சு இன மத மொழி வேறுபாடுகளின்றி கிராமியக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வசதி வாய்ப்புப்க்களை வழங்கி அவற்றை மேம்படுத்தும்.


-ஹஸ்பர் ஏ ஹலீம்_
பாரம்பரிய கிராமிய கைத்தொழில்களை அதனது சம்பிரதாயங்களை பாதுகாத்துக்கொண்டு
நவீன தொழிநுட்பங்களை உட்புகுத்தி தேசிய சந்தைக்கும் சர்வதேச சந்தைக்கும்மேற்றால்போல் அவற்றை ஏற்றுமதி செய்து நாட்டுக்கு அந்னிய செலாவணியை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும் என்று பிரம்புகள்,பித்தளை,மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

இன்று(19) திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தின் பத்தினிபுரம் கிராமத்தில் கிராமிய கைத்தொழிலில் ஈடுபடும் பயனாளிகளுக்கு அவசியமான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதி தியாக கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஜனாதிபதி அவர்கள் இம்முறை அவசியமான துறைகளை இனங்கண்டு அமைச்சுப்பொறுப்புக்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் இலக்குகளுடன் கூடிய பொறுப்புக்களை செய்ய வேண்டியுள்ளது.சவால்களை முறியடித்து எட்ட வேண்டிய இலக்குகளை அடைவதே பிரதான நோக்கமாகும்.குறிப்பாக எமக்கே உரித்தான உற்பத்திப்பொருட்களுக்கு பெறுமானத்தை வழங்கி உரிய தொழிலில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களை வலுப்படுத்துவது எமது அமைச்சின் பொறுப்பாகும். கிராமியக்கைத்தொழிலை மேம்படுத்தி அவசிமற்ற இறக்குமதிகளை தடைசெய்து உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தவுள்ளோம்.

இன மத மொழி வேறுபாடுகளின்றி கிராமியக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வசதி வாய்ப்புப்க்களை வழங்கி தங்களை மேம்படுத்தும் பொறுப்பை எமது அமைச்சு வழங்கும் என்று இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

42 பனைசார் உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபடும் பயனாளிகளுக்கு குறித்த உற்பத்திக்கு அவசியமான உபகரணங்களும் 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும் இதன்போது அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டது.இவற்றின் பெறுமதி 22 இலட்சங்களாகும்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன ,தம்பலகமம் பிரதேச செயலாளர்  திருமதி ஜெயகெளரி சிறீபதி ,அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எமது அமைச்சு இன மத மொழி வேறுபாடுகளின்றி கிராமியக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வசதி வாய்ப்புப்க்களை வழங்கி அவற்றை மேம்படுத்தும். எமது அமைச்சு  இன மத மொழி வேறுபாடுகளின்றி கிராமியக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வசதி வாய்ப்புப்க்களை வழங்கி அவற்றை மேம்படுத்தும். Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.