கோழி இறைச்சிக்கடை என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை. ஒருவர் கைது.


கோழி இறைச்சிக்கடை  என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்திச் செல்லப்பட்ட
போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்று பொலிஸாரால் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் புகையிலை, 75 போதைப்பொருள் அடங்கிய பக்கெற்கள், இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை பாக்கு மற்றும் 10 கிலோ போதைப்பொருளுக்கான சுவையூட்டி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி நகரின் பிரதான பாடசாலைகள் இரண்டுக்கு அருகில் கோழி இறைச்சிக் கடை என்ற போர்வையில் இந்த போதைப்பொருள் விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸ்hர் குறிப்பிட்டனர்.

தலாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்த போது அவர் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்நததாகவும்,  போதைப்பொருள் அடங்கிய ஒரு பக்கெற்றை 100 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கோழி இறைச்சிக்கடை என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை. ஒருவர் கைது. கோழி இறைச்சிக்கடை  என்ற போர்வையில்  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை. ஒருவர் கைது. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.