மூன்று கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர வீட்டை வாடகைக்கு பெற்று பாரிய அளவில் கசிப்பு உற்பத்தி.


கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாலதண்டுவன பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு
வீடொன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை, சிலாபம் பொலிஸ் பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவினர் முற்றுகையிட்டனர். இதன் போது, கசிப்பு நிலையத்தை நடாத்திச் சென்ற நபரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான இந்த ஆடம்பர வீட்டை,கைது செய்யப்பட்ட இந்நபர்

வாடகைக்கு எடுத்து இந்த கசிப்பு நிலையத்தை நடத்தி வந்துள்ளார். இங்கு உற்பத்தி செய்யப்படும் கசிப்பு, இரவு வேளையில் நாட்டில் பல பகுதிகளுக்கும் காரில் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக் கப்பட்டுள்ளது.

இவ்வீட்டில் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் வசித்து வந்துள்ளதாகவும், இரு பிள்ளைகளும் சிறு வயது பாடசாலை மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், அவ்வீட்டின் ஒரு அறையைத் தவிர, ஏனைய அனைத்து அறைகள் மற்றும் இடங்களையும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தியுள்ளதாகவும், இதனால் அவரது குடும்பம் சிறியதோர் இடத்தினுள்ளே வசித்து வந்துள்ளதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்னரே இவர்கள் இவ்வீட்டை வாடகைக்குப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மூன்று கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர வீட்டை வாடகைக்கு பெற்று பாரிய அளவில் கசிப்பு உற்பத்தி.  மூன்று கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர வீட்டை வாடகைக்கு பெற்று பாரிய அளவில்  கசிப்பு உற்பத்தி. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.