அரசில் இணைவதற்காக முஸ்லிம் கட்சிகள் பேச்சு.


20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு அரச தரப்பிலிருந்து
அழைப்பு விடுக்கப்பட்டால் தனித்தனியாக அரசுடன் இணையாது இரு பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து நிபந்தனைகளுடன் அரசில் இணைவது தொடர்பாக இரு முஸ்லிம் கட்சிகளுக்குள்ளும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இன்றைய நவமணி பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசுடன் இணைவது பற்றி பரவி வரும் வதந்திகள் பற்றி வினவிய போதே அரசில் இணைவதாயின் இரு கட்சிகளும் சேர்ந்து நிபந்தனைகள் பற்றிப் பேசி இணைவதே நல்லது.இரு கட்சியின் தலைமைத்துவத்தினால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கிழக்கின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரும் இது குறித்து இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீ டக் கூட்டத்திலும் அரசுடன் இணைவது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலி ருந்து நான்கு உறுப்பினர்கள் அரசுடன் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் பிரதித்தலைவர் நஸீர் அஹமட் ஏறாவூரில் புதனன்று நடைபெற்ற கூட்டமோன்றில் அரசினைப்பாராட்டி உரையாற்றியதாக எமது செய்தியாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் நசீர் கூறியதாவது.

தற்போதைய கோட்டபாய ராஜபக்ஷ வின் அரச நிருவாகத்தின் கீழ் நல்ல பல விடயங்கள் நடப்பதாகவும் அவற்றை வரவேற்றாக வேண்டிய வரலாற்றுத் தேவை இருப்பதாகவும் கூறினார்.

ஏறாவூரில் வடிகான் திட்டமும் கழிவு நீர் அகற்றும் திட்டமும் இந்தப் பகுதி தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டும். தன்னாமுனையிலிருந்து கிழக்குப் பல்க லைக்கழகத்தை உள்ளடக்கியதாக சித்தாண்டி வரைக்கும் வடிகான் திட்டமும் கழிவு நீர் அகற்றும் திட்டமும் அமுலாக்கப் படவுள்ளன.

நாட்டிலே அரசியல் ரீதியாகப் பல விட யங்கள் நடந்து வருகின்றன. அத்தோடு நல்ல மாற்றங்களும் இடம் பெற்று வருகின்றன.போதைப் பொருள் ஒழிப்பு விடயத்திலே ஜனாதிபதி அர்ப்பணிப்போடு தொடங் கியுள்ள வேலைத் திட்டத்தை முழு மனதோடு வரவேற்றாக வேண்டும்,பாதாள உலகக் கோஷ்டிகள் நசுக்கப்படுகிறார்கள் இதற்கு நமது பூரண ஒத்துழைப்பையும் அரசாங்கத்திற்கான ஆதர வையும் வழங்க வேண்டும். இவ்வாறான நல்ல விடயங்களையெல்லாம் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

அதேபோன்று அரசாங்கப் பணிமனை கள் இயங்குகின்ற விடங்களும் நல்ல மாற் நம் கண்டுள்ளன. இன்னும் பல விடயங்க வில் முன்னேற்றம் இடம் பெறவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பாகும் என்றார்.

அரசில் இணைவதற்காக முஸ்லிம் கட்சிகள் பேச்சு. அரசில் இணைவதற்காக முஸ்லிம் கட்சிகள் பேச்சு. Reviewed by Madawala News on September 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.