தனக்கு பிறந்த சிசுவொன்றை வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாய் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

தனக்கு பிறந்த சிசுவொன்றை வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாய் கைது.


தனக்கு பிறந்த சிசுவொன்றை வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாயை,
பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எஹலியகொட, அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவர் தற்போது எஹலியகொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கெனவே திருமணமான இப்பெண், கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்​ வேறொரு நபரின் உதவியுடனேயே இந்த சிசுவை தோட்டத்தில் புதைத்ததாகவும், கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஏ.ஏ.எம்.பாயிஸ் Tm
தனக்கு பிறந்த சிசுவொன்றை வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாய் கைது. தனக்கு பிறந்த சிசுவொன்றை வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாய் கைது. Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5