ஈரான் மல்யுத்த சாம்பியன் வீரர் நவித் அஃப்காரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஈரான் மல்யுத்த சாம்பியன் வீரர் நவித் அஃப்காரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற பட்டது.ஈரானில் 2018 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக நடந்த

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 27 வயதான மல்யுத்த சாம்பியன் நவிட் அஃப்கரி தூக்கிலிடப்பட்டார்.

ஈரானின் மல்யுத்த சாம்பியன் வீரர் நவித் அஃப்காரி, 2018ல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்புக் காவலரைக் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை அஃப்காரி தூக்கிலிடப்பட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

கொல்லப்பட்ட பாதுகாப்புக் காவலரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இன்று காலை அஃப்காரி தூக்கிலிடப்பட்டார் என்று தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள நீதித்துறைத் தலைவர் கூறினார்.
ஈரான் மல்யுத்த சாம்பியன் வீரர் நவித் அஃப்காரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற பட்டது. ஈரான் மல்யுத்த சாம்பியன் வீரர் நவித் அஃப்காரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற பட்டது. Reviewed by Madawala News on September 12, 2020 Rating: 5