இளைஞர்களை மைதானத்திற்கு அழைத்துவருவதே எமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் !!



இளைஞர்களை மைதானத்திற்கு அழைத்துவருவதே எமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய
சவால் என விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் சுமார் 5 அரை லட்சம் இளைஞர் யுவதிகள் போதைபொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.இது போதை பாவனை செய்பவர்களின் எண்ணிக்கையல்ல.

போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை.22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் ஐந்தரை லட்சம் பேர் போதை அடிமையாகியுள்ளமை மிகப்பாரதூரமான விடயம்.

இன்றுஇளைஞர்களை மைதானத்திற்கு அழைத்துவருவதே எமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

கிராமங்கள் தோறும் மைதானங்களை அமைத்துக்கொடுப்பதை விட விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை தேடிச் சென்று உதவி செய்வதே சிறந்த செயற்பாடாகும்.என அவர் கூறினார்.
இளைஞர்களை மைதானத்திற்கு அழைத்துவருவதே எமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் !! இளைஞர்களை மைதானத்திற்கு அழைத்துவருவதே எமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் !! Reviewed by Madawala News on September 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.