மத்திய கிழக்கில் புதிய விடியல் ஏற்பட்டுள்ளது : ட்ரம்ப் !



மத்திய கிழக்கில் புதிய விடியல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலுடனான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் நிகழ்வு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.


இதன்போது, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் நேரடி மத்தியஸ்தத்தின் அடிப்படையில் இடம்பெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், இஸ்ரேல் சார்பில் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, ஐக்கிய அரபு இராச்சியம் சார்பில் வெளியுறவு அமைச்சர் Sheikh Abdullah bin Zayed al-Nahyan மற்றும் பஹ்ரெய்ன் சார்பில் வெளியுறவு அமைச்சர் Abdullatif Al Zayani ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்த நிலையில், குறித்த மூன்று நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, ஏனயை அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எனினும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலை தீர்க்கப்படும்வரை, தாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட விரும்பவில்லை என ஒருசில மத்திய கிழக்கு நாடுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் புதிய விடியல் ஏற்பட்டுள்ளது : ட்ரம்ப் ! மத்திய கிழக்கில் புதிய விடியல் ஏற்பட்டுள்ளது : ட்ரம்ப் ! Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.