உயிர்த்த ஞாயிறு தெஹிவலை குண்டுதாரி, குண்டு வெடிப்புக்கு முன்னர் புலனாய்வு அதிகாரியை சந்தித்தது உட்பட பல விடயங்களை தெரிவித்த பூஜித்த...



உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட
போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக தான் பெரும் மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்ததாக சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவத்துள்ளார். அத்துடன் முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவும் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வாக்குமூலமளித்தார்.

பூஜித் ஜயசுந்தர உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 3 வது நாளாக வருகை தந்தார். இங்கு சாட்சியமளித்த அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இஸ்லாமிய இனவாதம் தொடர்பாக பொலிசாருக்கு பகிரங்க விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டாமென தெரிவித்திருந்தார்.


எனினும் வவுணதீவு பொலிஸ் அதிகாரியின் படுகொலை , மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு மற்றும் வனாத்தவில்லு வெடி பொருட்கள் கண்டெடுப்பு ஆகியன குறித்து விசாரணை நடாத்துமாறு தான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

அப்போது அரசாங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் வினவுகையில் இதற்கமைய நீங்கள் ஜனாதிபதியின் உத்தரவை மீறவில்லையா என கேள்வி எழுப்பினார். ஆம், நான் மீறினேன், ஏற்பட்ட நிலமை காரணமாக நான் பெரிதும் நிர்க்கதித்குள்ளாகி இருந்தேன். ஏன் என்றால் நான் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினால் என கூறமுடியுமா, பேச்சுவார்த்தை நடத்தக் கூட முடியாது , தான் மிகவும் நிர்கதிக்குள்ளாகியதாக பூஜித் ஜயசுந்தர பதிலளித்தார்.

தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இதற்கு பொலிஸ் அதிபரும் பாதுகாப்பு செயலாளரும் பொறுப்புக் கூறவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். இது ஊடகங்களிலும் பிரசுரமாகியது. எனினும் நான் எதனையும் கூறவில்லை.


இதன்போது இந்நிலை குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன ஏன் அறிவுறுத்தப்படவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அறிவுறுத்துவதில் எவ்வித பயனும் இல்லை நீதிபதீ, அவர் சுறுசுறுப்பானவர் அல்ல. பயிற்சி அளித்தல் மற்றும் மேலும் ஓரிரண்டு நிறுவனங்களே அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நிலவிய அரசியல் முரண்பாடுகள் காரணமாக நான் அதை கூறமுற்படவில்லையென பூஜித் ஜயசுந்ர பதிலளித்தார். அத்துடன் இங்கு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர மற்றுமொரு பரபரப்பு தகவலை வழங்கினார்.

தெஹிவளை ட்ரொப்பிக்கல் இன் விடுதியில் குண்டை வெடிக்கச் செய்த ஜெமீல் மொஹமட் என்பவர் குறித்த தகவலே அது. ஜெமீல் மொஹமட் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தாக்குதல் முறியடிக்கப்பட்டதன் பின்னர், ட்ரொப்பிக்கல் இன் விடுதிக்கு வந்து பிற்பகல் 1.30 மணியளவில் புலனாய்வு துறை அதிகாரியொருவரை சந்தித்துள்ளார்.


அப்போது புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு ஜெமிலுடன் தொடர்பு காணப்பட்டிருந்தால், சஹ்ரான் குறித்து புலனாய்வு துறை அறியாதிருக்க காரணமில்லையென தெரிவித்துள்ளார்.


நீதிபதி அவர்களே, பொருத்தமான நபரை அழைத்து கேட்டால், சஹ்ரானுடன் காணப்பட்ட தொடர்பு வெளிவருமென பூஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.


அவரிடம் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்றையதினம் நிறைவு செய்யப்பட்ட போதிலும் மீண்டும் 28 ம் திகதி சாட்சியம் கோரப்படவுள்ளது.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவும் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.


2018 ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென தெரிவித்த்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறியதாக பெரும்பாலனா சாட்சியாளர்கள் கூறினால், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் ஆம். நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


தொடர்ந்தும் பதிலளித்த அவர், பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையீடு செய்ய பிரதமருக்கு அதிகாரம் இருக்கவில்லையென தெரிவித்தார்.


ஜனாதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் முப்படைகளையும் அழைப்பதற்கு பிரதமருக்கு அதிகாரம் காணப்பட்ட போதிலும் ஜனாதிபதி தான் இல்லாத சந்தர்ப்பத்தில் பிரதமர் அழைப்பு விடுக்காவிட்டால், அவரை சந்திக்க வேண்டாமென முப்படை தளபதிகளும் அறிவுறுத்தப்பட்டிருந்தாக ருவன் விஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தெஹிவலை குண்டுதாரி, குண்டு வெடிப்புக்கு முன்னர் புலனாய்வு அதிகாரியை சந்தித்தது உட்பட பல விடயங்களை தெரிவித்த பூஜித்த... உயிர்த்த ஞாயிறு தெஹிவலை குண்டுதாரி, குண்டு வெடிப்புக்கு முன்னர் புலனாய்வு அதிகாரியை சந்தித்தது உட்பட பல விடயங்களை தெரிவித்த பூஜித்த... Reviewed by Madawala News on September 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.