மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்! - Madawala News Number 1 Tamil website from Srilanka

மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!மாட்டிறைச்சியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தேவையான  இறைச்சியை இறக்குமதி செய்வதற்கும் அதனை நிவாரண விலைக்கு வழங்குவதற்கும் அவசியமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் அரசாங்கம், அதேவேளை உடன் அமுலுக்குவரும் வகையில் நாட்டில் பசுவதை தடை செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கையில் பசுவதையைத் தடைசெய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.  

நாட்டில் பசுவதையை தடைசெய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்! மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்! Reviewed by Madawala News on September 29, 2020 Rating: 5