20 ஆவது திருத்தத்தினை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம் .


உத்தேச 20வது திருத்தத்தினை முன்வைத்து கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் எதிர்கட்சிகள்
தங்கள் தவறுகளையும் தங்களுக்குள் உள்ள பிளவுகளையும் மறைக்க முயல்கின்றன என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

20வது திருத்தத்தினை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம் அல்லது பாராளுமன்ற விவாதத்தின் போது திருத்தங்களை முன்வைக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தின் மூலம் நாடு பலவீனப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தது போன்று 20வது திருத்தத்தின் நகல்வடிவை வெளியிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். இதன்காரணமாக நாட்டின் நலனை கருத்தில் கொண்டே உத்தேச 20வது திருத்தம் வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆவது திருத்தத்தினை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம் . 20 ஆவது திருத்தத்தினை எதிர்ப்பவர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம் . Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.