இந்தியாவில் இருந்த போது, இலங்கையில் காணி உரிமையாளர்களை மிரட்டி 15 கோடி பெருமதியான காணிகளை கையகப்படுத்திய அங்கொட லொக்கா.


இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் தலைமறைவாக இருந்து 
 இந்தியாவில் உயிரிழந்த,  திட்டமிட்ட  குற்றங்களை புரிந்து வந்த குற்றவாளியான பாதாள உலக தலைவன் அங்கொட  லொக்கா இந்தியாவில் இருந்தபோது அங்கிருந்து,  இலங்கையில் 15 கோடி பெருமதியான காணிகளை உரிமையாளர்களை மிரட்டி  பலாத்காரமாக கையடக்கம்  செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 2019ஆம் ஆண்டு மட்டும் 309 பேச்சஸ் காணியை கையடக்கம் செய்துள்ளார்.

 வெல்லம்பிட்டிய , அங்கொட,  கொத்தட்டுட  ஆகிய போலீஸ் பிரதேசங்களிலேயே இவர் காணிகளை கையடக்கம்  செய்துள்ளார்.

 இவரிடம் காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் ஒரு சிலரே இதுவரை கொழும்பு குற்றவியல் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் .

முல்லேரியா வில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சிம்பு சமந்த என்றவரே இவருக்காக காணிகளை கையடக்கப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்த போது, இலங்கையில் காணி உரிமையாளர்களை மிரட்டி 15 கோடி பெருமதியான காணிகளை கையகப்படுத்திய அங்கொட லொக்கா. இந்தியாவில்  இருந்த போது, இலங்கையில் காணி  உரிமையாளர்களை மிரட்டி 15 கோடி பெருமதியான காணிகளை கையகப்படுத்திய அங்கொட லொக்கா. Reviewed by Madawala News on September 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.