அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டது.இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா
தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


"எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.


மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.


இந்தியத்தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமித் ஷா ஈடுபட்டார்.


கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக டெல்லி அரசுடன் இணைந்து தொடர் அலோசனை கூட்டங்கள் நடத்தியது, மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததது என களத்தில் இறங்கி அமித் ஷா பணிகளை மேற்கொண்டார்.

- நன்றி : BBC 
அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டது. அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டது. Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5