தேசிய பட்டியல் விவகாரம் ; அஸாத் சாலி மீண்டும் ஏமாற்றப்படுவாரா ? - Madawala News Number 1 Tamil website from Srilanka

தேசிய பட்டியல் விவகாரம் ; அஸாத் சாலி மீண்டும் ஏமாற்றப்படுவாரா ?ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விவகாரத்தை சுமுகமாக முடித்துக்கொள்ள கூட்டணி
கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலுக்காக 7 பேர் பரிந்துரை செய்யப்படுவார்கள் என கொழும்பு தகவல்கள் தெரிவித்தன.

Ranjith Maddumabandara,Bakeer Markar, Tissa Attanayake,Hareen Fernando,Eran Wickramaratne, Mayantha Dissanayake, Diana Gamage ஆகியோரின் பெயர்களே தேசியப்பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் உள்ளவாங்கப்பட்ட அஸாத் சாலிக்கும் அந்த நியமனம் வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்டு பின்னர் அந்த நியமனம் அசாத் சாலிக்கு வழங்கப்படவில்லை.

சஜித் பிரேமதாச தேசியப்பட்டியல் விடயத்தில் தனக்கு வாக்கு மாற மாட்டார் என அஸாத் சாலி முன்னதாக கூறி வந்த நிலையில் அவருக்கு அந்த நியமனம் வழங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் பலர் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய பட்டியல் விவகாரம் ; அஸாத் சாலி மீண்டும் ஏமாற்றப்படுவாரா ? தேசிய பட்டியல் விவகாரம் ; அஸாத் சாலி மீண்டும் ஏமாற்றப்படுவாரா ? Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5