பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்.


நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால்
அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்ற நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Siva Ramasami
பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தப்படும். பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தப்படும். Reviewed by Madawala News on August 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.