நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள்.


கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் பெருநாள் தொழுகைகள் 
-எஸ்.எம்.எம்.முர்ஷித்-
இலங்கையில் உள்ள முஸ்லீம்கள்
இன்று சனிக்கிழமை (01.08.2020) தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

பெருநாளைக் கொண்டாடும் முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று காலை ஈடுபட்டனர் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் பெருநாள் தொழுகைகள் பள்ளிவாயல்களில் இடம் பெற்றன.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை பிரதேசத்தில் பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும் ஹைராத் பள்ளிவாயலில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விருவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.

இதன் போது நாட்டு மக்களுக்காகவும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டியும் கொரோனா நோயிலிருந்து உலக மக்களை பாதுகாக்குமாரும் வேண்டி துஆ பிராத்தனையும் இடம் பெற்றது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கந்தளாய் பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாயல்களில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் மிகவும் விமர்சையாக சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றன.

 -எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாயல்களில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் மிகவும் விமர்சையாக சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்றன.

கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ  பள்ளிவாயல் மற்றும் பேராற்றுவெளி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலிலும்  இன்று(1) காலை 6.30 மணிக்கு பெண்களுக்கான தொழுகைகளும்,7.00 மணிக்கு
ஆண்களுக்கான தொழுகைகளும் இடம்பெற்றன.

ஆண்கள் பெண்கள் அனைவம் புத்தாடைகள் அணிந்து சந்தோசத்துடன் செல்லுவதை காணக்கூடியதாகவுள்ளது.

பெருநாள் தொழுகைகளை ஏ.ஆர்.எம்.ஜவாஹிர் மௌலவி நடாத்தி வைத்தார்.

மடவளையில் நடைபெற்ற ஈத் அழ்ஹா திடல் தொழுகை.

மடவளை MIDG Trust இன் கீழ் செயற்படும் ஜாமிஉல் இஸ்லாஹ் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (01)
ஈத் அழ்ஹா திடல் தொழுகை இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

சுகாதார நடைமுறை மற்றும் இடப் பற்றாக்குறை காரணமாக பொது விளம்பரப்படுத்தல்  இன்றி மிகச் சாதாரணமாக இவ்வேற்பாடு செய்யப் பட்டடது. சுகாதார வழிகாட்டல்களைப் பேணி நடைபெற்ற இந்நிகழ்வில் விதிமுறைகளை பேணி மக்கள் சிறப்பாக நடந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பொதுவான அறித்தலினூடாக செய்வதற்கான இட வசதி பெற்றுக் கொள்ள முடியாததால் குறித்த நபர்களை மாத்திரமே இணைத்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டது என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்காதவர்கள் மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இடத்தை வழங்கி நபிவழி இபாதத்திற்கு ஒத்துழைப்பு வங்கிய குடும்பத்திற்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக.

இந் நிகழ்வை இமாமாக நின்று சிறப்புரை ஆற்றிய அஷ்ஷேய்க் நாழிர் (ஹாமி) அவர்களுக்கும் ஜஸாகல்லாஹு ஹைரன்.

இந்த ஈத் அழ்ஹா பெருநாளில் மக்களின் சிந்தனையிலும், நம்பிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றும், நாடு அனைத்து வகையிலும்  சுபீட்சம் பெற வேண்டும் என பிரார்த்திப்போம்.

நபி வழிப் பிரகாரம் மேற்கொள்ளப்படும் எம் அனைவரினதும் செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

இவ்வண்ணம்
MIDG- Trust
2020/08/01

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை 
புனித தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளினை இன்று (01) முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஹஜ் பெருநாளினை அமைதியான முறையில் திருகோணமலை மாவட்டத்திலும் கொண்டாடி வருகின்றனர்கள்.

சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் அமைதியான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் இடம் பெற்று வருகிறது. காலையில் பெருநாள் தொழுகைகளை பள்ளிவாயல்கள்,திடல் தொழுகை என தொழுகை நடாத்தப்பட்டது. இந் நாளில் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாகவும் வாழ இந் நாள் வழி வகுக்கிறது.
கிண்ணியா,மூதூர், முள்ளிப் பொத்தானை,கந்தளாய்,புல்மோட்டை உட்பட பல பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் அமைதியான முறையில் பெருநாள் கொண்டாட்டம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் ஹஜ் பெருநாள் தொழுகை

- பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம்   கல்முனை நற்பிட்டிமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இன்று நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதானத்தில் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக சமூக இடைவெளிகள் பேணப்பட்டு இடம்பெற்றது.

 பெருநாள் தொழுகையை மௌலவி டபிள்யூ.எம்.ஹூமைஸ் ஹாமி நடாத்தினார். இதேவேளை குத்பா பிரசங்கத்தை அஷ்ஷெய்க் ஏ.எச்.எச்.எம்.நௌபர் ஹாமி நிகழ்த்தினார்.

 இப்பெருநாள் தொழுகையிலும், குத்பா பிரசங்கத்திலும் பெருமளவிலான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதியில்  இஸ்லாமிய பிரசார மையம் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் தொழுகை மருதமுனை அக்பர் ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது

சர்வதேச அழைப்பாளரும் இஸ்லாமிய பிரசார மையத்தின் தலைவருமான எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகையினையும் பிரசங்கத்தையும் நடத்தி வைத்தார்.சமூக இடைவெளி பேணிய விதத்தில் தொழுகை இடம்பெற்றது.
-----

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த புனித ஹஜ் பெருநாள் தொழுகை.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (1) சனிக்கிழமை செம்மண்ணோடைப் பகுதியில்  இரு இடங்களில் நடைபெற்றன.

கொவிட் – 19 காரணமாக சனநெரிசலை கட்டுப்படுத்தி, சமூக இடைவேளிகளை பேணும் நோக்கில் இம்முறை ஹஜ் பெருநாள் தொழுகை இரு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதென்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் தொழுகை மற்றும் குத்பா உரையினை ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களும், செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்ற தொழுகை மற்றும் குத்பா உரையினை தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களும் நிகழ்த்தினர்.

குறித்த தொழுகையினை நிறைவேற்ற ஆண்கள், பெண்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு, தொழுகை சுகாதார முறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளைப் பேணி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள். நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள். Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5