சுபீட்சமான வாழ்வை பலப்படுத்துவதற்கு தேவையான பாராளுமன்றத்தை அமைப்பதற்கான எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்ற முடிந்தது.



2020 பொதுத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஶ்ரீலங்கா
பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.

சுபீட்சமான வாழ்வை பலப்படுத்துவதற்கு தேவையான பாராளுமன்றத்தை அமைப்பதற்கான எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்ற முடிந்ததாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பலமிக்க ஒத்துழைப்புடன் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு தமக்கு வாழ்த்து தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலிக் மற்றும் உப ஜனாதிபதி பைசார் நசீம் ஆகியோருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
சுபீட்சமான வாழ்வை பலப்படுத்துவதற்கு தேவையான பாராளுமன்றத்தை அமைப்பதற்கான எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்ற முடிந்தது. சுபீட்சமான வாழ்வை பலப்படுத்துவதற்கு தேவையான பாராளுமன்றத்தை அமைப்பதற்கான எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்ற முடிந்தது. Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.