பாரிஸ் ஹாஜியாரின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும் ; எம். எஸ். எம். சாபி ஹாஜியார் கோரிக்கை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பாரிஸ் ஹாஜியாரின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும் ; எம். எஸ். எம். சாபி ஹாஜியார் கோரிக்கை.இக்பால் அலி
பெரும்பான்மையின சமூகத்துடன் சிறுபான்மையினமாக வாழும்

முஸ்லிம்களாகிய நாங்கள் அவர்களுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் சேர்ந்து போக வேண்டும் எனவும் அதற்கு ஆளும் அரசாங்கத்தின் வெற்றிக்கும் பலம் சேர்ப்பதே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.


எனவே கண்டியில் போட்டியிடும் பாரிஸ் ஹாஜியாரின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும்.


ஆதலால் நான் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தேன் என்று கடந்த இருவது வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் மாகாண சபையில் முன்னாள் அமைச்சராகவும் இருந்த எம். எஸ். எம். சாபி ஹாஜியார் தெரிவித்தார்


ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் ஹாஜியாரை ஆதரித்து (30) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கெலிஓய எலமல்தெனியவில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் விசேடமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச  கலந்து கொண்டார்.  


அவர் முன்னிலையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்று இணைந்து கொண்ட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். எம். சாபி ஹாஜியார் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் தனிப் பெரும்பான்மையின மக்களுடைய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இப்பொதுத் தேர்தல்களிலும் அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று நூறுக்கு நூறு விகிதம்  நம்புகின்றேன்.  


அவர்களுடைய வெற்றியில் சிறுபான்மையின மக்களும் பங்காளிகளாக இருக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து போக வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமாகும்.  அற்காகவே நான் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் இணைந்து கொண்டேன்.இம்முறை அக்குறணை மற்றும்  கண்டியிலுள்ள ஏனைய முஸ்லிம் கிராமங்களில் இருந்து கணிசமானளவு வாக்குகளை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு அளிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.


 அது மட்டுமல்ல முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் கண்டியில்  ஆளும் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரிஸ் ஹாஜியாரை வெற்றி பெறச் செய்வது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. இன்று   அவரது  வெற்றி யின் மூலம்  தான்  ஆளும் அரசாங்கத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம
அக்குறணை நகரில் அடிக்கடி வெள்ளம் பிரச்சினை இருக்கிறது. 


இந்த வெள்ளத்தின் மூலம் கோடிக்கணக்கான ந~;டங்களை வர்த்தகர்கள் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றார்கள். இது தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் இரு பெரும் அமைச்சர்கள் இருந்தும் இந்தப் பிரச்சினைக்குரிய   நடவடிக்கைளை துரிதமாக முன்னெடுக்கவில்லை. 


 நான் 1987 களில் அரசியலுக்குள் நுழைந்தவன். பின்னர் மர்ஹ{ம் ஏ. சி. எஸ் ஹமீத் அவர்களுடன் ஏற்பட்ட சிறுபிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன். 


 அக்கட்சியில் போட்டியிட்டு 1991 களில் அக்குறணை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவராக இருந்தேன்.  


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்  ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில்  அமைப்பாளராக நியமிப்பதற்கு உயர்பீடம் தீர்மானித்திருந்தது.  ஆனால் அது வேறு  இன்னுமொரு நபருக்கு வழங்கப்பட்டது.  


இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் ராஜாளியாக் கட்சியான ஐனநாயக ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியில் இணைந்து  1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டேன்.
அப்பொழுது நாங்கள் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டோம். அதில் நானும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டேன்.


 1994 களில் காமினி திசாநாயக மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்தார். அப்போது நாங்கள் எல்லோரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டோம்.  தொடர்ந்து மூன்று மாகாண சபைத் தேர்தலில்  வெற்றி பெற்று உறுப்பினராகத் தெரிவு செய்யட்டப்பட்டேன்.  2003, 2004 ஆம் ஆண்டுகளில் மத்திய மாகாண சபையில் அமைச்சராகவும் இருந்தேன். 

திரும்புவம் 2009 களில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டேன். அதற்குப் பின்னர் அசாத் சாலி இம்மாகாணத்தில் போட்டியிட்டு என்னுடைய பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டது. ஆனாலும் பின்னர் மாகாண சபையில் இருந்த ஒருவருடைய வெற்றிடத்திற்கு நான் மீண்டும் விரும்பு வாக்கின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டளவில் மீண்டும் மத்திய மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி


பாரிஸ் ஹாஜியாரின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும் ; எம். எஸ். எம். சாபி ஹாஜியார் கோரிக்கை. பாரிஸ் ஹாஜியாரின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும் ; எம். எஸ். எம். சாபி ஹாஜியார் கோரிக்கை. Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5