இன்னமும் வாடகை வீட்டிலேயே வசிக்கிறேன். எனது பெயரிலோ எனது உறவினர் பெயரிலோ எந்த உரிமை பத்திரங்களுமில்லை... எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் பணியாற்றி உள்ளேன்.


திருகோணமலை மாவட்டத்தில் நான் மேற்கொள்ளும் அரசியல் பயணம் தனித்துவமானது என
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாகிய இம்ரான் மகரூப் தெரிவித்தார் .
கிண்ணியாவில் வெள்ளிக்கிழமை  மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நான் எனது நான்கரை வருட பாராளுமன்ற காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தனித்துவமான அரசியல் பயணம் ஒன்றை மேற்கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் எதுவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் என்னால் பணியாற்ற முடிந்தது
நான் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில் எமது மாவட்டத்துக்கு வரும் அபிவிருத்திகள் எதையும் தடுத்த வரலாறு இல்லை.

யார் அபிவிருத்திக்கான நிதிகளை கொண்டுவந்தாலும் அவர்களுக்கு நான் இடையூறாக இருந்ததில்லை. அபிவிருத்தி திட்டங்களுக்கு பெயர் வைக்க எந்த அரசியல்வாதியுடனும் நான் முரண்பட்டதில்லை.

இன்னமும் வாடகை வீட்டிலேயே வசிக்கிறேன். எனது பெயரிலோ எனது உறவினர் பெயரிலோ எந்த உரிமை பத்திரங்களுமில்லை. எனது மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நான் கடந்த நான்கரை வருடங்களாக பணியாற்றியுள்ளேன்.


இந்த தேர்தல் காலங்களில் கூட ஏனைய வேட்பாளர்களை விமர்சித்து எனது பிரச்சார பணிகள் நானோ எனது ஆதரவாளர்களோ முன்னெடுக்கவில்லை. நான் செய்த சேவைகளையும் செய்ய எண்ணியுள்ள சேவைகளையும் கூறியே நாம் உங்களிடம் வாக்கு கேட்கிறோம்.


எனது செயற்பாடுகள் திருப்தி அளித்திருப்பின் இம்மாவட்ட மக்கள் எனக்கு மீண்டும் ஒரு சந்தர்பம் வழங்குவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இன்னமும் வாடகை வீட்டிலேயே வசிக்கிறேன். எனது பெயரிலோ எனது உறவினர் பெயரிலோ எந்த உரிமை பத்திரங்களுமில்லை... எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் பணியாற்றி உள்ளேன். இன்னமும் வாடகை வீட்டிலேயே வசிக்கிறேன். எனது பெயரிலோ எனது உறவினர் பெயரிலோ எந்த உரிமை பத்திரங்களுமில்லை... எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் பணியாற்றி உள்ளேன். Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.