அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது.


-பாறுக் நஜீ-
Eliana Apicella எனும் அமெரிக்க பிரஜை அண்மையில்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி இலக்கம்  6 இல் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவைசிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் Dr. P. K. Ravindran தலைமையில் வெற்றிகரமா மேற்கொள்ளப்பட்டது.

இன்று 11.08. 2020 பூரண சுகத்துடன் அவர் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை மிகச் சிறந்தது என்றார். இது எமது இலங்கை நாட்டுக்கும், வைத்தியசாலைக்கும்
வைத்தியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கிடைத்த சிறந்ததொரு அங்கீகாரம் ஆகும்.
அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது. அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது. Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5