உங்கள் எல்லா நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளட்டும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

உங்கள் எல்லா நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளட்டும்.


கொவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில், நற்கருமங்களில் ஈடுபட்டவாறு இன்று ஹஜ்ஜுப்
பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் எல்லா நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

கொவிட் -19 பரவலை தடுக்கும் நோக்கிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்புப் படையினரும் சுகாதார அதிகாரிகளும் பரிந்துரைத்த வழிகாட்டல்களை நாம் பின்பற்ற வேண்டியிருப்பதால், முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், ஹஜ்ஜை மிக எளிமையான முறையில் கொண்டாட வேண்டியவர்களாக உள்ளோம். அந்த பரிந்துரைகளின்படி, இந்த ஆண்டு ஹஜ் கொண்டாட்டங்களை எங்கள் வீடுகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டியவர்களாக உள்ளோம்.

நமது நாடு உட்பட உலக மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை விரைவாக தணியவும், உலக மக்கள் அனைவரையும் இந்த அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கவும், சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

கொவிட் -19 தொற்றுநோயை உலகிலிருந்து ஒழிப்பதற்கான உறுதியுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பொறுமையையும் தைரியத்தையும் எங்களுக்கு வழங்குமாறு, இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில், இலங்கை முஸ்லிம் சமூகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த புனித நாளில் இஸ்லாமிய வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் இந்தத் துன்பத்திலிருந்து எமது தாய்நாட்டையும் உலக மக்களையும் பாதுகாக்குமாறு, வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

இந்த பேரழிவிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதற்காக, அயராது, பொறுப்புடன் உழைக்கும் அரச அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் தினமான இந்நாளில், எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்போம்.
உங்கள் எல்லா நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளட்டும். உங்கள் எல்லா நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளட்டும். Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5