சிறுபான்மை கட்சிகளே புதிய நாடாளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

சிறுபான்மை கட்சிகளே புதிய நாடாளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும்.


ஹஸ்பர் ஏ ஹலீம்_
முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்லர் உதயன் கம்மன்பில போன்ற இனவாதிகள்
முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதி என சித்தரித்து வருகிறார்.சஹ்ரான் என்னும் கயவன் ஒரு நாள் தோன்றி ஒரு நாள் மறைந்தான் இவனுடன் தொடர்புபடுத்தி முன்னால் அமைச்சர் றிசாதை குற்றம் சுமத்தி தெற்கிலும் சர்வதேசத்திலும் ஒட்டு மொத்த 22 இலட்சம் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக காட்ட நினைக்கின்றார்கள் இதற்கு துனையாக எஸ்.பி திசாநாயக்க, அத்துரலிய, கெகலிய, ஞானசாரர், விமல் போன்றவர்களே முட்டுக் கொடுக்கிறார்கள் என முன்னால் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் (01)இடம் பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்

 பெரும்பான்மை ஆசனங்களை யாரும் பெற முடியாது இதனை 1989 களில் இருந்து நாம் கண்டு வருகிறோம் 1994 ல் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் 63 வீத வாக்குகளை பெற்ற அதே தருணம் பொது தேர்தலில் 101 ஆசனமே பெற்றார்.இது போன்று கோத்தபாய ராஜபக்ச 52 வீத வாக்குகளை பெற்றவர் இவரால் 80 தொடக்கம் 90வரையான ஆசனங்களையே பெற முடியும் இம் முறை அமையவிருக்கும் புதிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சிறுபான்மை கட்சிகளே தீர்மானிக்கும் சக்தியாக மாறும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு,மலையக மக்கள் முண்னனி போன்றனவே தீர்மானிக்கும் என்றார்.
சிறுபான்மை கட்சிகளே புதிய நாடாளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும். சிறுபான்மை கட்சிகளே புதிய நாடாளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும். Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5