ஞானசார தேரரை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பதில் சட்ட சிக்கல் ?



அபே ஜனபல கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ஞானசார தேரரை நியமிக்குமாறு அக்கட்சித்தலைவர் தேர்தல்கள் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


ஞானசார தேரரை தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க அக்கட்சி மத்திய குழு அனுமதி அளித்தமையை அடுத்து இந்த கடிதம் அனுப்பப்பட்டதாக அக்கட்சி தலைவர்  சமன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாலும்  அவரின் பெயர் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்படாதாலும் அவரை தேசிய பட்டியலில் நியமிப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


ஒருவரை தேசிய பட்டியலில் நியமிக்க அவர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்குக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் அல்லது அவரின் பெயர் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் ஞானசார தேரரை நியமிப்பதில் சிக்கல் உள்ளது என கூறப்படுகிறது.

ஞானசார தேரரை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பதில் சட்ட சிக்கல் ? ஞானசார தேரரை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பதில் சட்ட சிக்கல் ? Reviewed by Madawala News on August 09, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.