குருநாகலில் காலங்காலமாக ஐ.தே.க கோட்டையாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் இம்முறை பொதுஜன பெரமுன கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

குருநாகலில் காலங்காலமாக ஐ.தே.க கோட்டையாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் இம்முறை பொதுஜன பெரமுன கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.


-இக்பால் அலி-
குருநாகல் மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் களமிறங்கிய
பிரதமர் மஹிந்த ராஜபக்ச  மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய இருவருடைய வெற்றியை உறுதிப்படுதிக் கொடுத்த விசேடமாக முஸ்லிம் தாய்மார்கள் என்னுடைய உடன் பிறப்பிக்கள் அனைவருக்கும் எனது உணர்வு பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று காந்தா சவிய பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் தெரிவித்தார்.


பிரதமர் மஹிந்த ராஜபக்ச  மற்றும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரது வெற்றியை முன்னிலைப்படுத்தி கடுமையாக உழைத்த ஆதரவாளர்களுக்கிடையிலான சந்திப்பு குருநாகல் அவரது இல்லத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே  காந்தா வசிய பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து

குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு இம்முறை கணிசமானளவு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்ற சில இடங்களில்  இம்முறையே பாரியதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

இம்மாவட்டத்தில்  முஸ்லிம்கள் வாழும்  கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவு கட்சி பெற்றிபெற்றுள்ளது. இவை வரலாற்றில் முதல் தடவையாகும்


முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிழையான பரப்புரைகளை  எதிர்தரப்பினர்கள் களமிறங்கி முன்னெடுத்தனர். ஆனாலும் எமது காந்த சவிய அமைப்பினர் அவற்றை முறியடித்து மக்களுக்கு சரியான வழிகளைக் காட்டுவதற்காக தீவிரமான பிரச்சார முன்னெடுப்புக்களை மாவட்டம் முழுவதும் மேற்கொண்டனர்.

இதன் மூலம் விசேடமாக  கணிசமானளவு முஸ்லிம் தாய்மார்களுடைய வாக்குகள்  ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.  ஆளும் தரப்பில் அமையவுள்ள பாராளுமன்றத்தில் முஸ்லிம்களும் ஒரு பங்காளிகள் என்ற நற்பெயரைப் பெற்றுக் கொண்டனர். 

இந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச , அமைச்சர் ஜொனஸ்டன் பெர்னாண்டோ முதல் நிலையிலேயே வெற்றியடைவைத்துள்ளனர்.  இந்த வெற்றியில் முஸ்லிம்களாகிய நாங்களும் பங்காளிகள் தான் என்பதை உத்தரவாதப்படுத்தியுள்ளோம். 


அவை  மட்டுமல்ல  நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு சரியான வழிகாட்டுதலைச் செய்துள்ளோம்.  ஆதலால் இன்று  பிழையான வழிகாட்டுதல் செய்த  அனைவரையும் மண்கவ்வச் செய்யப்பட்டுள்ளார்கள்.
இம்மாவட்டத்தில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மையின சிங்கள சமூகத்துடன் சேர்ந்து சகோதரத்துடனும் நட்புறவுடனும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காக தங்களுடைய பெறுமதிமிக்க வாக்குகளினால் பூரண பங்களிப்பை வழங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் நூற்றுக்கு 30 விகிதமான முஸ்லிம் வாக்குகள் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு வழங்கியுள்ளார்கள்.


இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச  மற்றும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய இருவரும் விசேடமாக காந்த சவிய பெண்கள் அமைப்புக்கும் மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்குமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


எனவே ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் பெற்றிக்கு எமது காந்தா சவின பெண்கள் அமைப்போடு இணைந்து பாரிய பங்காற்றிய ஆதரவாளர்கள்  மற்றும் கணிசமானளவு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு வாக்குகளை வழங்கிய  தாய்மார்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  என்னுடைய உணர்வுபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்

இக்பால் அலி

குருநாகலில் காலங்காலமாக ஐ.தே.க கோட்டையாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் இம்முறை பொதுஜன பெரமுன கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. குருநாகலில்  காலங்காலமாக ஐ.தே.க கோட்டையாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் இம்முறை பொதுஜன பெரமுன கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5