பொதுஜன பெரமுன அமோக வெற்றி ! கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.



ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 17 தேசிய பட்டியல் ஆசனங்களுடன் மொத்தமாக 145 ஆசனங்களை பெற்று 2020 பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ளது.


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள்  தேசிய பட்டியல் ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது. 


அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகளை பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு, 


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 128 ஆசனங்கள் 


ஐக்கிய மக்கள் சக்தி - 47 ஆசனங்கள் 


இலங்கை தமிழரசு கட்சி - 9 ஆசனங்கள் 


தேசிய மக்கள் சக்தி - 2 ஆசனங்கள் 


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2 ஆசனங்கள் 


தேசிய காங்கிரஸ் - 1 ஆசனம் 


ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1 ஆசனம் 


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1 ஆசனம் 


தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1 ஆசனம் 


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 ஆசனம் 


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம் 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 ஆசனம் 


முஸ்லிம் தேசிய கூட்டணி - 1 ஆசனம்


2020 ஆம் ஆண்டு பொதுத் ​தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக் கொண்ட தேசிய பட்டியல்  ஆசனங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. 


அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது. 


மேலும் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் அபே ஜன பல கட்சி போன்றவற்றிகு தலா ஒரு ஆசனம் வீதம் கிடைக்கப்பெற்றுள்ளது.



பொதுஜன பெரமுன அமோக வெற்றி ! கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. பொதுஜன பெரமுன அமோக வெற்றி ! கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.