நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களே... உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களே... உங்கள் மீது நம்பிக்கை உள்ளது.நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களே....
சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் உங்களுக்கு ஒரு நல்ல இடமுள்ளது. தங்கள் நடு நிலமையான தூர நோக்குப் பார்வைமீது நம்பிக்கையும் உள்ளது.

உங்கள் சேவையில் இறைவனது திருப்தியை நோக்காகக் கொள்வீர்களாக. பல்லின மக்களும் புரிந்துணர்வுடன் நிம்மதியாக வாழும் சுபிட்சமிக்க நாடாக இந்நாட்டை கட்டியெழுப்ப உழைப்பீராக.

உடையாதவாறு பாதுகாப்பான பெட்டிக்குள் முட்டைகளை அடுக்கிக் கொண்ட உமது சாமர்த்தியம், இந்நாட்டில் நீதித்துறை சிறப்புற மலர்ச்சி பெறவும் துணை இருக்கட்டுமாக.

முற்கள் நிறைந்த பாதையில் நடந்து வந்தே இவ்வுயர்வை பெற்ற ஓர் போராளி நீர் என்பது யாவருக்கும் தெளிவு.

பலப்படுத்த கடமைப் பட்ட சமூகமே உம்மை பலவீனப் படுத்திய எழுத்துக்களும், பின்னூட்டல்களும் உம்மை அசைத்து விடாதது போலவே இனிவரக் கூடிய பயனத்திலும் சமயோசிதத்துடன் தைரியமாக நடப்பீராக.

உமது பாதங்களை பலப் படுத்தி, வலதிலும் இடதிலும் தேவையானவர்களை துணையாக்கி, அறிவையும் ஆளுமையையும் பரிசாக்கி, நீதத்தை நிலைபெறச் செய்ய அல்லாஹ் அருள்பாளிப்பானாக.

அபூ ஸுமையா
மடவளை பஸார்.
நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களே... உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களே... உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5