ஒரு பவுன் தங்கம், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவானது.


நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இலங்கை மக்கள் அதிகளவில்
முதலீடு செய்தும் பயன்படுத்தியும் வருகின்றனர்.

தங்கத்தை பாதுகாப்பான மற்றும் இலாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்கத்தின் விலையில் இவ்வாறான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை நாணய அலகிற்கு அமைய 24 கரட் தங்கம் ஒரு பவுன் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை 99 ஆயிரத்து 380 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு பவுன் தங்கம், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவானது.  ஒரு பவுன் தங்கம், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவானது. Reviewed by Madawala News on August 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.