அம்பாறையில், ஆரம்பத்தில் மந்தகதியில் ஆரம்பமான வாக்குப்பதிவு இறுதியில் 72 .84 வீதமாக அதிகரித்தது.



திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள்
 இன்று(5) புதன்கிழமை மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் மந்தகதியில் இடம்பெற்ற வாக்கு பதிவு ( காலை 10 மணிக்கு 6% பதிவு)

5 மணிக்கு நிறைவு பெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72 .84 வீதமாக காணப்படுவதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி எம் எல் பண்டார நாயக்க தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 525 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட் டிருந்தன.

இந்த வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் தற்போது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றன.இங்கு கொண்டுவரப்படும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் முறையான வகையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன

இதற்கென மொத்தமாக 74 வாக்கெண்ணும் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 20 க்கும் அதிகமான அரசியல் கட்சிகளும் பல சுயேட்சைக்குழுக்களும் களமிறங்கி உள்ளன.மை குறிப்பிடத்தக்கது.

இவற்றில் சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களாக 55ம் தபால் மூல வாக்குகள் எண்ணுதற்காக 19 நிலையங்களும் செய்யப்படும் இன்று திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி எம் எல் பண்டார நாயக்க தெரிவித்தார்.

நாளை வியாழக்கிழமை(6) காலை 8 மணி முதல் இந்த வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பாறையில், ஆரம்பத்தில் மந்தகதியில் ஆரம்பமான வாக்குப்பதிவு இறுதியில் 72 .84 வீதமாக அதிகரித்தது. அம்பாறையில், ஆரம்பத்தில் மந்தகதியில் ஆரம்பமான வாக்குப்பதிவு இறுதியில் 72 .84 வீதமாக அதிகரித்தது. Reviewed by Madawala News on August 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.