தம்புள்ளை பள்ளி 40 பேர்ச் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத கையாளாகாதவர்களின் பின்னால் எவ்வாறு செல்வது ? - Madawala News Number 1 Tamil website from Srilanka

தம்புள்ளை பள்ளி 40 பேர்ச் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத கையாளாகாதவர்களின் பின்னால் எவ்வாறு செல்வது ?தம்புள்ளை பள்ளி 40 பேர்ச் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க  முடியாத முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு  முஸ்லிம் சமூகத்தின்  உரிமைகளை பெற்றுக்கொடுக்கப்போகிறார்கள் என பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் கேள்வி எழுப்பினார்.


ஆட்சியை தாருங்கள் முஸ்லிம்களை பாதுகாக்கிறோம் என்று கூறி அதிகாரத்தில் 4 அரை வருடங்கள் இருந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எந்தவித பாதுகாப்பினையும் வழங்கவில்லை.


மக்கள் பிரதிநிதிகள் 21 பேர் பாராளுமன்றத்தில் அரசுடன் ஒட்டிக்கொன்ண்டிருந்தமையால் சமூகத்திற்கு கிடைத்த நன்மைகள் என்ன ? 


இனங்களுக்கு இடையே மோதல் வந்த போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் சமூகங்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துவிட்டு மஹிந்த ராஜபக்‌ஷ அணி மீது பலி போட்டனர்.


கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசு காலத்தில் தம்புள்ளை பள்ளி பிரச்சினை வந்த போது 80 பேர்ச் காணி தருவதாக அப்போதய ஜனாதிபதியினால் எமக்கு கூறப்பட்டது.அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களின் கைகளுக்கு அதிகாரம் சென்ற போது 4 அரை வருடங்கள் அதிகாரத்தில் இருந்தும் 20 பேர்ச் காணியை கூட தம்புள்ளை பள்ளிக்கு பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியாமல் போனது.


நல்லாட்சி அரசின் 100 நாள் அரசாங்கத்தில் தம்புள்ளை பள்ளி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அல்லாஹ்வாக பார்த்து ரவுப் ஹக்கீகிடம் நகர திட்டமிடல் அமைச்சை கொடுத்தான் ஆனால் அவர் அந்த பிரச்சினையை தீர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை.


ரனிலை பாதுகாக்க பட்ட கஷ்டத்தில் சிறிதளவை முஸ்லிம்களின் விடயத்தில் பட்டிருந்தால் முஸ்லிம்களின் பாதி பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்.


40 பேர் காணி பிரச்சினையை தீர்க்க முடியாத இவர்களை நம்பி முஸ்லிம்கள் எமாறுவதா அல்லது ஆளும் தரப்பில் இணைந்து கொள்வதா என்பதை நாளை மறுதினம் தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


தம்புள்ளை பள்ளி 40 பேர்ச் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத கையாளாகாதவர்களின் பின்னால் எவ்வாறு செல்வது ? தம்புள்ளை பள்ளி 40 பேர்ச் காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத கையாளாகாதவர்களின் பின்னால் எவ்வாறு செல்வது ? Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5