முஸ்லிம்களுக்கு என்று தனி சட்டம் வேண்டாம்... இறுதியில் இன ரீதியாக தனிநாடுகள் உருவாகும் நிலைமைக்கு இது செல்லும்.


முஸ்லிம் சட்டம், காதி நீதிமன்றம் ஆகியவற்றை நீக்குவதை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
பட்டியல் வேட்பாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளியிட்டுள்ள கருத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.

https://lankacnews.com/%E0%B6%B8

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் போன்ற சிங்களம் படித்த, சிங்கள மொழியை நன்றாக பயன்படுத்தும் மற்றும் சிங்கள மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒருவர் இப்படியான அடிப்படைவாத நிலைப்பாட்டை கொண்டிருப்பது குறித்து வருத்தப்படுகிறேன்.

ஒரு நாட்டில் ஒரு சட்டம் அமுலில் இருக்க வேண்டும். இன ரீதியாக தனித்தனியான சட்டங்களை உருவாக்கினால், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என தனித்தனியாக சட்டங்களை ஏற்படுத்த நேரிடும்.

இறுதியில் இந்த தனிச் சட்டங்களை நடைமுறைப்படுத்த இன ரீதியாக தனிநாடுகள் உருவாகும் நிலைமைக்கு இது செல்லும்.

இதனால், இலங்கை நாடு என்ற வகையில் ஒரு நாடு ஒரு சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும். இனம் மற்றும் மத ரீதியன தனியான சட்டங்கள் தேவையில்லை எனவும் மொஹமட் முஸ்ஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கு என்று தனி சட்டம் வேண்டாம்... இறுதியில் இன ரீதியாக தனிநாடுகள் உருவாகும் நிலைமைக்கு இது செல்லும். முஸ்லிம்களுக்கு என்று  தனி சட்டம் வேண்டாம்... இறுதியில் இன ரீதியாக தனிநாடுகள் உருவாகும் நிலைமைக்கு இது செல்லும். Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.