யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் பொலிசாரால் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் பொலிசாரால் கைது.


திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவரின் வீட்டிற்குள்
அத்துமீறி நுழைந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை நேற்றிரவு (10) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறிமங்களபுர, சோமபுர, பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் 18 வயதுடைய யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்ததாக யுவதியின் தாய் சேருநுவர பொலிஸ் நிலையத்தின் அவசர தொலைபேசிக்கு விடுத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எப் :  பாருக்-
யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் பொலிசாரால் கைது. யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் பொலிசாரால் கைது. Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5