உங்களது வேலைத் திட்டங்களை விஸ்தரிக்கவில்லை என்றால் நாளைய மறுமையில் சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என்ற அச்சம் எங்களிடத்தில் இருக்க வேண்டும்.


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய
தேவைப்பாடு இந்த கால அரசியலை பொறுத்த வரையில் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா அமைப்பாளர் எம்.எப்.ஜௌபர் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் -

எங்களுக்கு அழுத்தம், கஸ்டம் இருக்கின்றது. கடந்த காலத்தில் உங்களுக்கு சிறப்பாக பணி செய்தவர்கள். எமது சமூகத்தை ஏமாற்றாமல், கொள்ளையடிக்காமல் மரணத்திற்கு பயந்து சேவையாற்றிய தடயம் எங்கள் உள்ளத்தில் உள்ளது.

இது உண்மையாக இருக்கமாக இருந்தால், இந்த மாவட்டத்திற்கு இந்த தலைமை பேசப்படுமாக இருந்தால், மாவட்ட மக்களுக்கு தெளிவான வழிகாட்டல், நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு முன் செல்கின்ற தலைவர்களுக்கு பின்புலமாக இருந்து உங்கள் பிள்ளை உதவுவான் என்ற நம்பிக்கை இருந்தால் ஒரு புள்ளடி போடுவதில் என்ன பிழை இருக்கின்றது.

எங்களுக்கு இருக்கின்ற பிரச்சனை எமது இருப்பை பற்றிய பிரச்சனை, தமிழ் சமூகத்தினையும், தமிழ் தலைவர்களையும் துடைத்து எறிந்து விட்டோம் என்று சொல்கின்றார்கள். இனி துடைத்தெறிய இருக்கின்ற ஒரேயொரு சமூகம் முஸ்லிம் சமூகம். எனவே அந்த பட்டியிலிலே நாங்கள் போய் விடக் கூடாது.

தமிழ் சமூகத்தினர்; துடைத்து எறியப்பட்டார்கள் என்பதை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. எதிர்வரும் காலங்களில் இரண்டு சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இந்த கால அரசியலை பொறுத்த வரையில் இருக்கின்றது. இதற்கு நாங்கள் எல்லோரும் சமமான முறையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலவரத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் போராட்டத்தின் இருப்பை குறைப்பதற்காக வரவுள்ள பாராளுமன்ற கதிரையில் நல்ல பேச்சாளர்கள், தைரியமிக்கவர்களையும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தலைவன் றிசாட் பதியுதீன் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றான் இந்த நிகழ்வு உங்களுக்கு நல்ல படிப்பினையாக இருக்கும்.

இலங்கை வரலாற்றில் பல தடவை விசாரணைக்கு அழைத்து பந்தாடப்பட்ட அரசியல்வாதி  றிசாட் பதியுதின் நிகழ்வுக்கு நீங்கள் புள்ளடி போட மனமில்லையா. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஆசனத்தினை குறைக்கின்ற ஒப்பந்தத்தினை எடுத்துக் கொண்டு செயற்படுகின்றவர்களுக்கு புள்ளயடியைப் போடுவதற்கு உள்ளீர்களா.

இதனை நீங்கள் சரியாக இணங்கண்டு செயற்படவில்லை என்றால், உங்களது வேலைத் திட்டங்களை விஸ்தரிக்கவில்லை என்றால் நாளைய மறுமையில் சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என்ற அச்சம் எங்களிடத்தில் இருக்க வேண்டும். போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, பேச்சுவார்தை மேசைகளில் பிரதிநிதியாக இருப்பதற்கும், எதிர்காலத்தில் வரவுள்ள அச்சுறுத்தல்களுக்கு அங்காங்கே புலம்புவதற்கு, பாராளுமன்றத்தில் நீதி கேட்பதற்கு தான் உங்களிடத்தில் வாக்கு கேட்கின்றோம்.

இளைஞர்கள் தேர்தலுக்கு தயார்படுத்தப்பட்ட இயந்திரமல்ல. எதிர்கால சந்ததிகள், உங்களது பிள்ளைகள், உறவுகளுக்கு தலைமை காட்ட வந்தவர்கள் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள். அரசியல் சக்தி ஒன்று இல்லை என்றால் முஸ்லிம் போராட்டத்தினை வெல்ல முடியாது என்ற காரணத்தினால் தான் உங்களை சங்கிலி பிணைப்போடு இணைத்துள்ளோம்.

இந்த சங்கிலி பிணைப்பு எக்கால கட்டத்திலும் அறுந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த கட்சிக்கும், மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் உள்ள சத்திய பிரமானமாக எடுத்துக் கொண்டு தைரியமிக்க தலைமையை தெரிவு செய்யுங்கள் என்றார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.தையிப் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், கட்சியின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டர்.
உங்களது வேலைத் திட்டங்களை விஸ்தரிக்கவில்லை என்றால் நாளைய மறுமையில் சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என்ற அச்சம் எங்களிடத்தில் இருக்க வேண்டும். உங்களது வேலைத் திட்டங்களை விஸ்தரிக்கவில்லை என்றால் நாளைய மறுமையில் சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என்ற அச்சம் எங்களிடத்தில் இருக்க வேண்டும். Reviewed by Madawala News on July 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.