வடமேல் மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் ஆளுநரை நியமித்த இந்த அரசை குருணாகல் மாவட்ட முஸ்லிம்கள் கௌரவிக்க வேண்டும் ..



வடமேல் மாகாணத்திற்கு ஒரு  முஸ்லிம் ஆளுநரை நியமித்த இந்த அரசை குருணாகல் மாவட்ட
முஸ்லிம்கள் கௌரவிக்க வேண்டும் என “காந்தா சவிய” அமைப்பின் தலைவியும் வடமேல் மாகாண ஆளுநரின் பாரியாருமான பெரோசா முஸம்மில் குறிப்பிட்டார்.

இன்று குருனாகல் பண்டுவஸ்னுவரை மிதியால மடிகே கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வடமேல் மாகாணம் என்பது ஒரு பெரும்பான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் மாகாணமாகும். இங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையாக சிதறி வாழ்கின்றனர்.அது மட்டுமல்லாமல் இலங்கையில் அதிகமான பௌத்த விகாரைகளை கொண்ட மாவட்டமும் இம்மாவட்டமாகும்.நான்கு முக்கிய ராஜதானிகளை கொண்ட மாவட்டமாகும்.

இவ்வாறான ஒரு மாகாணத்திற்கு ஜனாதிபதி ஒரு முஸ்லிம் ஆளுநரை நியமித்துள்ளமையானது அவர் திறமைசாலிகளுக்கு முதலிடம் வழங்குவதை எடுத்துக்காட்டுகிறது.எனது கணவர் கொழும்பு மேயராக இருந்த காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்தார். அப்போது கொழும்பு நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இருவரும் இணைந்து முன்னெடுத்தனர்.அதன்போது எனது கணவரின் தனித்திறமைகளை கண்டுகொண்ட ஜனாதிபதியும் பிரதமரும் அவர் பதவி ஏற்ற பின்னர் எனது கணவரை  வடமேல் மாகாண ஆளுநராக நியமித்தார்.

ஆளுநர் பதவி மாவட்ட மக்களுக்கு கிடைத்த அங்கீரமாகும்.இந்த நியமனத்தை வழங்கி  மக்களுக்கு சேவை வாய்ப்பு வழங்கிய எமது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்  இந்த அரசுக்கும் நாம் நன்றி கடன் செலுத்த வேண்டும்.

முஸ்லிம்  ஆளுநரை இங்கு நியமித்த போது அதற்கு  பலர் எதிர்ப்பு வெளியிட்டனர் .இதன்போது எமது மாவட்ட தலைவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பன்சலை பன்சலையாக  சென்று பௌத்த தேரர்களுடன் கதைத்து அனைவரையும் சமாதானபடுத்தினார்.அவ்வாறான ஒரு தலைவரை நாம் கௌரப்படுத்துவது நமது கடமை. அவருக்கும் ஒரு விருப்பு வாக்கினை அளிக்க வேண்டும். 

எம்மை கௌரவித்த இந்த அரசை நாம் கௌரவிக்க வேண்டும் என அவர் மேலும் என மேலும் கூறினார். 

இந்த நிகழ்வை மிதியால மடிகே பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் அஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார்.

வடமேல் மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் ஆளுநரை நியமித்த இந்த அரசை குருணாகல் மாவட்ட முஸ்லிம்கள் கௌரவிக்க வேண்டும் .. வடமேல் மாகாணத்திற்கு ஒரு  முஸ்லிம் ஆளுநரை நியமித்த இந்த அரசை குருணாகல் மாவட்ட முஸ்லிம்கள் கௌரவிக்க வேண்டும் .. Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.