PHOTOS : பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

PHOTOS : பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை.


-பாறுக் ஷிஹான்-
பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு   கல்முனை பொலிஸ்
நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PHOTOS : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/3143557352397242?

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பல சுகாதார நடைமுறைகளை சுகாதார அமைச்சினால் தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனை மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் இணைந்து மக்களிற்கு விழிப்புணர்வு நடவடிக்கையை அன்றாடம் நடாத்தி வருகின்றதுடன் வீதிகளில் நடமாடும் மக்களிற்கு சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன தெளிவு படுத்தினார்.இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும்  உரிய சுகாதார முறைமைகளை கையாளாத அனைவரையும் நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தை மீறியதாக அச்சட்டத்தின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் 3 ஆம் கட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில்  இலங்கையிலும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட வில்லை. இந்நிலையில்  கட்டம் கட்டமாக நாடு வழமைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படும் பட்சத்தில் அதனை கட்டுப்படத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருகின்றமையினால்இ வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய முறையில் கவனிக்க வேண்டுமென அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர்  வெளியில் நடமாடும் சமயங்களில் மீண்டும் சந்தேகத்திற்கு இடமான அறிகுறிகள் காணப்பட்டால்இ அவர்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 2007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொலிஸாரின் 24 மணி நேர பாதுகாப்பு கட்டமைப்பு கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டள்ளது.

கடந்த  வெள்ளிக்கிழமை(19) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் மற்றும் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றில் ஈடுபட்டதாக  மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில்  நேற்று (30) இரவு கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏலவே  மேற்குறித்த இரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
PHOTOS : பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை. PHOTOS : பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு  பொலிஸார்  எச்சரிக்கை. Reviewed by Madawala News on July 01, 2020 Rating: 5