உலகின் பாதுகாப்பான நாடுகளின் / நகரங்களின் பட்டியலில் தோஹா (கட்டார்), மற்றும் அபுதாபி முதல் இடங்களில்... - Madawala News Number 1 Tamil website from Srilanka

உலகின் பாதுகாப்பான நாடுகளின் / நகரங்களின் பட்டியலில் தோஹா (கட்டார்), மற்றும் அபுதாபி முதல் இடங்களில்...உலகின் பாதுகாப்பான நாடுகளின் ( நகரங்களின்) ட்டியலை 
உலகத்தின் மிகப்பெரிய இணைய தரவுத்தளமான நும்பியோ (Numbeo) வெளியிட்டிருக்கிறது.

இந்த பட்டியலில் தோஹா ( கட்டார்) இற்கு முதல்
இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் இடம் அமீரகத்தின் அபுதாபி நகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் மத்தியில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் குற்ற குறியீட்டின் (Crime Index) அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமாக நாடுகளை வரிசைப்படுத்தியிருக்கிறது நும்பியோ.


இதில் நாடுகளின் அடிப்படையில் அமீரகம் பாதுகாப்பு குறியீட்டில் (safety index score) 84.55 புள்ளிகளுடனும், குற்ற குறியீட்டில் 15.45 மதிப்பும் பெற்று பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


“நகரம் அல்லது நாட்டில் நடைபெற்ற குற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்த குற்ற குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. குற்ற சம்பவங்கள் 20 க்கு

குறைவாக இருந்தால் அதனை மிகக்குறைவு என வரையறுக்கிறோம். குற்ற சம்பவங்கள் 20 – 40 க்குள் இருந்தால் குறைவு எனவும் 40 – 60 க்குள் இருந்தால் மிதமான எனவும் 60 – 80 க்குள் இருந்தால் அதிகம் எனவும் 80 ஐ கடந்தால் மிக அதிகம் எனவும் வரையறுக்கிறோம்” என நும்பியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கத்தார் 88.10 பாதுகாப்பு குறியீட்டு புள்ளிகளையும், தைவான் 84.74 பாதுகாப்பு குறியீட்டு புள்ளிகளையும் பெற்றுள்ளன.


குற்ற குறியீடுக்கு நேர்மாறானது பாதுகாப்பு குறியீடு. “ஒரு நகரம் அதிகமான பாதுகாப்பு குறியீட்டை பெற்றிருந்தால் அந்நகரம் பாதுகாப்பான நாடாக கருதப்படும் என” நும்பியோ தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் குற்ற விகிதங்கள்
குற்றங்களின் அளவு :11.27 (மிகக்குறைவு)
வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போதல் பற்றிய கவலைகள் – 13.85
கார் திருடுபோதல் பற்றிய கவலைகள் – 10.57
கார்களில் உள்ள பொருட்கள் திருடுபோதல் பற்றிய கவலைகள் – 16.04
தாக்கப்படுதல் குறித்த கவலைகள் – 13.49
அவமானப்படுத்தப்படுதல் குறித்த கவலைகள் – 17.34
நிறம், மதம் மற்றும் இனம் காரணமாக உடல் ரீதியாக தாக்கப்படுதல் குறித்த கவலைகள் – 13.19
மக்கள் போதைப் பொருட்களை உபயோகித்தல் மற்றும் கையாளுதல் குறித்த பிரச்சினைகள் – 17.48
சொத்து குறித்த காழ்ப்புணர்ச்சி மற்றும் திருடுபோதல் பற்றிய பிரச்சினைகள் – 15.54
ஆயுதக்கொள்ளை மற்றும் தாக்கப்படுதல் போன்ற வன்முறைக் குற்றங்கள் சார்ந்த பிரச்சினைகள் – 11.57
லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த பிரச்சினைகள் – 23.29
மேற்கண்ட அனைத்து வகைகளிலும் அமீரகம் மிகக்குறைவான குற்ற குறியீடுகளையே பெற்றுள்ளது.
உலகின் பாதுகாப்பான 10 நாடுகள்
குறைந்த பாதுகாப்பு கொண்ட 10 நாடுகள் / நகரங்கள்
பட்டியலில் இடம்பெற்றுள்ள
அதில் இலங்கையின் கொழும்பு 153 வது இடத்தில் உள்ளது.
Full list


By : Uaetamil web
உலகின் பாதுகாப்பான நாடுகளின் / நகரங்களின் பட்டியலில் தோஹா (கட்டார்), மற்றும் அபுதாபி முதல் இடங்களில்... உலகின் பாதுகாப்பான நாடுகளின் / நகரங்களின் பட்டியலில் தோஹா (கட்டார்), மற்றும் அபுதாபி முதல் இடங்களில்... Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5